தமிழகம்

தமிழகத்தில் உச்சம் தொட்டது கொரோனா பாதிப்பு..! இன்று மட்டும் இவ்வளவு இறப்பு மற்றும் புது பாதிப்பு.! முழு விவரம்.!

Summary:

Tamil Nadu corona status current update

தமிழகத்தில் இன்று  ஒரே நாளில் 4,807 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவ தொடங்கியதில் இருந்து தினம் தினம் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மற்றும் முக்கிய தகவல்கள் குறித்து தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுவருகிறது. அந்த வகையில் இன்று வெளியான அறிவிப்பில் புதிதாக 4,807 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,65,714 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 2,403 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். அதில் இன்று மட்டும் 88 பேர் கொரோனாவால் தமிழகத்தில் உயிரிழந்துள்ளனர். 3,049 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையை பொறுத்தவரை 1,219 பேருக்கு இன்று புதிதாக கொரோனா நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.


Advertisement