இன்று ஒரே நாளில் மட்டும் எவ்வளவு உயிர் பலி தெரியுமா?? தமிழகத்தில் கோரத்தாண்டவமாடும் கொரோனா!!

இன்று ஒரே நாளில் மட்டும் எவ்வளவு உயிர் பலி தெரியுமா?? தமிழகத்தில் கோரத்தாண்டவமாடும் கொரோனா!!


Tamil nadu corona positive case updates

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதிதாக 34 ஆயிரத்து 875 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 34,875 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 6297 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதன்மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 16 லட்சத்து 99 ஆயிரத்து 225 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தவர்களில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 365 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆயிரத்து 734 ஆக உயர்ந்துள்ளது. 

சற்று ஆறுதலாக இன்று மட்டும் 23 ஆயிரத்து 863 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். அந்தவகையில் தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்ட 14 லட்சத்து 26 ஆயிரத்து 915 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.