தமிழகத்தில் இதுவரை இம்புட்டு கொரோனா பாதிப்பா..? தற்போதைய மொத்த பாதிப்பு எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா.?Tamil Nadu corona cases total update

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய  கொரோனா வைரஸ் தற்போது  முழுவதும் வேகமாக பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா போன்ற நாடுகள் கொரோனாவால் பெரும் இழப்புகளை சந்தித்து வருகிறது.

கொரோனாவின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்தியாவில் மட்டும் இதுவரை 1,238,635 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக தமிழகத்தில் இதுவரை 1,92,964 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் ஒரே நாளில் தமிழகத்தில் 6,472 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

corona

தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 3,232 ஆக உயர்ந்துள்ளது. அதில், இன்று மட்டும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 88 ஆகும். அதேபோல் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,210 பேர் இன்று குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தமாக 1,36,793 பேர் குணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.