தமிழகத்தில் அடிக்கும் வெய்யில் கொரோனாவை கட்டுப்படுத்துமா.? என்ன சொல்கிறது உலக சுகாதார மையம்.?

Sun light wont control corono says WHO


Sun light wont control corono says WHO

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. இதுவரை 70 க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவியுள்ள இந்த கொடிய வைரஸால் இதுவரை 3500 கும் அதிகமானோர் உயிர் இழந்துள்ளனர்.

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவைப் பொருத்தவரை 39 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் தமிழகத்தை சேர்ந்த ஒருவரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.

corono

இந்நிலையில், இதை செய்தால் கொரோனா வராது, அதை செய்தால் கொரோனா வராது என பல்வேறு தவறான செய்திகள் சமூக வலைத்தளங்களில் வைரல்கிவருகிறது. அதில் குறிப்பான ஓன்று, அதிக வெயிலால் கொரோனா பரவாது என்பதும் ஓன்று. தமிழகத்தில் கோடைகாலம் ஆரம்பமாகவுள்ளதால், இந்த வெயிலுக்கு கொரோனா பரவாது என செய்திகள் பரவி வருகிறது.

இந்நிலையில், வெயில் கொரோனாவைக் கட்டுப்படுத்தும் என்கிற நம்பிக்கையை உலக சுகாதார மையம் முற்றிலும் மறுத்துள்ளது. இதுபோன்ற கருத்துக்களை நம்பி அலட்சியமாக செயல்பட்டு கொரோனா பரவுவதற்கு வழிவகுத்துவிட வேண்டாம் என்று உலக சுகாதார மையம் கேட்டுக்கொண்டுள்ளது.