தமிழகம்

ஆழ்துளை கிணற்றில் விழுந்து சுஜித் உயிரிழந்தார்! சோகத்தில் தமிழகம் மக்கள்!

Summary:

Sujith died

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்துள்ள நடுகாட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த இரண்டு வயது சிறுவன் சுஜித் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5.45 மணியளவில் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருக்கையில் அருகில் இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். 

இந்நிலையில் ஐந்து நாட்களாக நடைப்பெற்ற மீட்பு பணியானது 80 மணி நேரங்கள் கடந்ததை அடுத்து மீட்பு பணி தோல்வியில் முடிவடைந்துள்ளது. அதாவது தற்போது சுஜித் உயிரிழந்ததாக வருவாய் துறை நிர்வாக ஆணையர் ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இன்று அதிகாலை 2.20 மணியளவில் வருவாய் நிர்வாக ஆணையர் ராதா கிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இரவு 10.30 மணிக்கே அழுகிய வாடை வந்துள்ளது. அதனை அடுத்து மீட்பு குழுவினர் இடுக்கி போன்ற உதவியுடன் குழந்தையின் உடலை மீட்டுள்ளதாக கூறியுள்ளார். 


Advertisement