தமிழகம்

முகநூலில் ஏற்பட்ட காதல்..!! திகைத்துப்போன முகநூல் காதலன்..!! கழிவறைக்குள் பெண் செய்த காரியம்...!!

Summary:

முகநூலில் ஏற்பட்ட காதல் மோகம்..!! கழிவறைக்குள் பெண் செய்த காரியம்..!!

தூத்துக்குடி மாவட்டம் ஆலந்தலை கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் ரெங்கன் (வயது 31).  இவருடைய மனைவி ஐஸ்வர்யா (வயது 27). இந்த தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் ஐஸ்வர்யா, சமூக வலைதளமான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமை ஒரு பொழுது போக்காக தினமும் பயன்படுத்தி வந்துள்ளார். இதனையடுத்து, பேஸ்புக்கில், ராமநாதபுரம் மாவட்டம் கொம்பூதியை சேர்ந்த  விஜய்யுடன் ( வயது 23) அறிமுகம் ஏற்படுத்தி தனது உரையாடலை இரவும் பகலுமாக வாடிக்கையாக வைத்து வந்துள்ளார்.

பின்னர், இவர்கள் இருவரும் காதல் மோகத்தில் மூழ்கி உரையாடி வந்துள்ளனர். பின்னர் விஜயின் பெற்றோர்களுக்கு இவர்களது காதல் தெரியவந்த நிலையில், இருவருக்கும்  திருமண ஏற்பாடு செய்துள்ளனர் . இந்நிலையில், ஐஸ்வர்யா தனக்கு ஏற்கனவே திருமணம் நடத்திருப்பதும், இரண்டு குழந்தைகள் உள்ளதையும் மறைத்து, விஜயுடன் திருமணம் செய்து கொண்டார். திருமணம் நடந்து முடிந்த நிலையில் பதிவு செய்வதற்க்கு இருவரும் ஆதார் அட்டை தேவைப்பட்டதால், ஐஸ்வர்யா சற்றே திகைத்து போனார். பின்னர் ஐஸ்வர்யா, எனக்கு ஏற்கனவே திருமணம் ஆகிய நிலையில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது என விஜய் மற்றும் இவரின் குடும்பத்திடம் கூறியுள்ளார். இதனைக் கேட்ட எல்லோரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பின்னர் இதனைக் கேட்டறிந்த விஜய் ,ஜஸ்வர்யாவை ஏற்க மறுத்துள்ளார். பிறகு விஜய், ஜஸ்வர்யாவின் கணவர் நம்பரை வாங்கி, கணவருக்கு தகவல் கொடுத்து தனது மனைவியை அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளார். இந்த தகவலை கேட்டறிந்த உடனே ரெங்கன் ராமநாதபுரம் வந்துள்ளார். பின்னர் ஐஸ்வர்யாவை ரெங்கன் அழைத்த போது அவருடன் செல்ல மறுத்துள்ளார்.  இச் சம்பவம் போலிஸாருக்கு தெரிய வந்த நிலையில் போலிசார் கணவன் மனைவி இருவரையும் திருச்செந்தூர் காவல் நிலையத்திற்க்கு இரவு நேரத்தில் அழைத்துச் சென்றனர்.  போலீசார் நேற்று காலை வருவதாக தெரிவித்ததால் நேற்று முன்தினம் இரவில் பெண்ணை பாதுகாப்பாக வைப்பதற்க்கு ராமநாதபுரம் மருத்துவமனையில் உள்ள சேவை மையத்தில் ஐஸ்வர்யாவை தங்கவைத்துள்ளனர் . பிறகு மனமுடைந்து இருந்த ஐஸ்வர்யா  அங்குள்ள கழிவறைக்குள் நேற்று தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இச்சம்பவம் குறித்து திருச்செந்தூர் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தனது இரண்டு குழந்தைகளை தவிக்கவிட்டு தற்கொலை செய்ததை அறிந்த அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement