அரசியல் தமிழகம்

மாணவர்களின் மனித கடவுளே.! எப்போதும் எங்கள் ஓட்டு உங்களுக்கே.! முதல்வர் பழனிசாமிக்கு நன்றி தெரிவிக்கும் மாணவர்கள்!

Summary:

students thanks to tamilnadu cm

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி கல்லூரிகள் 4 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டுள்னன. இதனையடுத்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்கவில்லை. மாணவர்கள் ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில், கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஜூலை 23-ந்தேதி அறிவித்தார். ஆனால் யூ.ஜி.சி. கல்லூரி இறுதித் தேர்வை ரத்து செய்ய முடியாது என்பதில் பிடிவாதமாக இருந்தது.

இந்நிலையில், மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, அவர்களின் நலன் கருதி, தமிழக அரசால் அமைக்கப்பட்ட உயர்மட்ட குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், இறுதி பருவத் தேர்வுகளைத் தவிர மற்ற செமஸ்டர் தேர்வுக்கான கட்டணம் செலுத்தி காத்திருக்கும் மாணவர்களுக்கு தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்து மதிப்பெண்கள் வழங்கப்படும் என சமீபத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.  
 
இதனால் காலம்காலமாக அரியர் எழுதி வரும் பலர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் இந்த உத்தரவிற்கு வாழ்த்து தெரிவித்து போஸ்டர்கள் ஒட்டி ஆரவாரம் செய்தது வந்தனர். மேலும் பல மாணவர்கள் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து பேஸ்புக், வாட்ஸ்அப் ஸ்டேடஸ்களில் வீடியோக்களை வெளியிட்டும் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று தமிழ்நாடு மாணவர்கள் முன்னேற்ற அமைப்பு சார்பில் தமிழ்ப் பத்திரிக்கையொன்றில் ஒரு பக்க அளவிற்கு ”மாணவர்களின் மனித கடவுளே” என போட்டு எங்கள் ஓட்டு உங்களுக்கே என விளம்பரபடுத்தியுள்ளனர். மேலும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி புண்ணியத்தில் ஆல் பாஸ் செய்து டிகிரி பெற்றவர்கள் பலரும் இந்த விளம்பரப் படத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்!


Advertisement