தமிழகம்

பொறியியல் படிப்பை விட கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் சேர ஆர்வம் காட்டிய மாணவர்கள்! - ஒரே நாளில் குவிந்த 80 ஆயிரம் விண்ணப்பங்கள்!

Summary:

students intrested to arts and sience

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடூர வைரஸானது இந்தியாவிலும் தீவிரமாக பரவி வருகிறது. கொரோனா காரணமாக பள்ளி கல்லூரிகள் அனைத்தும் நீண்ட நாட்களாக மூடப்பட்டுள்ளன. இந்தநிலையில் இந்த வருடம் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை 16 ஆம் தேதி வெளியானது.

இந்தநிலையில் மாணவர்கள் அரசு கலை கல்லூரிகளில் விண்ணப்பிக்க இணையதள வாயிலாக ஜூலை 20-ஆம் தேதி தொடங்கி ஜூலை 31-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் கல்லூரிகள், பல்கலை உறுப்பு கல்லூரிகள் ஆகியவற்றில் 1,71,350 இடங்கள் உள்ளன. இதற்கு ஒரே நாளில் 80,000 மாணவர்கள் விண்ணப்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆன்லைனில்  விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இந்த மாதம் 31 வரை இருக்கும் நிலையில், மேலும் அதிக மாணவர்கள் கலை அறிவியல் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பொறியியல் படிப்புகளுக்கு 5 நாட்களில் 73,000 விண்ணப்பித்த நிலையில் கலை அறிவியல் படிப்புகளுக்கு 80,000 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Advertisement