வகுப்பறையிலேயே விசமருந்திய காதல் ஜோடி.. விசமருந்த இதெல்லாம் ஒரு காரணமா..!

வகுப்பறையிலேயே விசமருந்திய காதல் ஜோடிகள்.. விசமருந்த இதெல்லாம் ஒரு காரணமா..!


students-had-poison-in-classroom-at-cuddalore

கடலூர்‌ மாவட்டம் மேற்கு ராமாபுரத்தில் அரசு‌ மேல்நிலைப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் ஆண், பெண் இருபாலரும் பயின்று வருகின்றனர்.

நேற்று 12 ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் வகுப்பறையிலேயே தான் ஏற்கனவே கலக்கி வைத்திருந்த விசத்தினை குடித்துள்ளான். அதனை பார்த்த மாணவி ஒருவரும் மீதமிருந்த விசத்தினை குடித்துள்ளார். இதனை சக மாணவர்கள் தலைமை ஆசிரியரிடம் தெரிவிக்கவே இருவரையும்‌ கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டதில் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அது ஒருபுறம் இருக்க இருவரும் விசமருந்த என்ன காரணம் என போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

அதில் இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்துள்ளனர். அந்த மாணவிக்கு தோல் வியாதி இருப்பதால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்துகொள்ள போவதாக தன் காதலனிடம் தெரிவித்துள்ளார். தன் காதலிக்கு முன் நான் சாகிறேன் என முதலில் மாணவன் விசமருந்த, காதலன் விசமருந்தியதை கண்ட மாணவியும் விசமருந்தியுள்ளார்.