தமிழகம்

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

Summary:

students can apply online for arts and sience college

தமிழகத்தில் 12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது.  இந்த நிலையில், தமிழகத்தில் முதல் முறையாக கலை அறிவியல் கல்லூரிகளுக்கும்  வரும் 20 ஆம் தேதி முதல் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதுவரை கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்பத்தை சமர்பிக்க நேரில் வர வேண்டிய சூழ்நிலை  இருந்த நிலையில், கொரோனா காரணமாக தற்போது முதலமைச்சரின் உத்தரவுப்படி கலை அறிவியல் கல்லூரிகளுக்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது. அதேபோல் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கும் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 கலை,அறிவியல் படிப்புகளில் சேர http://tngasa.in மற்றும் http://tndceonline.org என்ற இணையதள பக்கங்களில் விண்ணப்பிக்கலாம் எனவும், தொழில்நுட்ப கல்லூரிகளில் சேருவதற்கு http://tngptc.in,http://tngptc.com என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement