தமிழகம்

பள்ளியிலே முதலிடம் பிடித்த மாணவன் தற்கொலை செய்துகொண்ட துயர சம்பவம்!

Summary:

student suicide for low mark

வேலூர் மாவட்டம்  குடியாத்தம் அடுத்த கொட்டாரமடுகு கிராமத்தை சேர்ந்த பாலாஜி என்பவரின் மகன் அசோக்குமார். இவர் இந்த வருடம் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு எழுதியிருந்த நிலையில் தேர்வு முடிவுக்காக காத்திருந்துள்ளான் மாணவன் அசோக்குமார். இந்தநிலையில் நேற்று ஜூலை 16 ஆம் தேதி  பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.

இந்தநிலையில் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் மாணவன் அசோக்குமார் அவரது வீட்டில் தற்கொலை செய்துக்கொண்டார். இவர் 12 ஆம் வகுப்பில் 600 மதிப்பெண்களுக்கு 481 மதிப்பெண்கள் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அவர் படித்த தனியார் பள்ளியில் அசோக்குமார் தான் முதல் மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது. 

மாணவன் அசோக்குமார் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பற்றி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.


Advertisement