தமிழகம்

தேர்வெழுதிவிட்டு வந்து சோகம்.. மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட பரிதாபம்.!

Summary:

தேர்வெழுதிவிட்டு வந்து சோகம்.. மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட பரிதாபம்.!

தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பிய மாணவி, திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் உள்ள மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டப்பகுதியில் வசித்து வருபவர்கள சந்திரகாந்தன்-கௌரி தம்பதியினர். இவர்களது மகள் ஹேமாவதி (வயது 17). இவர் தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்று வரும் நிலையில், நேற்று வழக்கம்போல் பொதுத்தேர்வு எழுதி விட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது வீட்டிற்கு அருகாமையில் உள்ள டியூஷன் சென்டருக்கு சென்றுவிட்டு, வீட்டிற்கு வந்துள்ளார். 

தொடர்ந்து சிலிண்டர் போடுவதற்காக ஊழியர் ஒருவர் வீட்டிற்கு வந்து கதவை தட்டிய போது, கதவு திறக்கப்படாததால் அருகில் வசிப்பவர்களிடம் இந்த விஷயம் தொடர்பாக தெரிவித்துள்ளார். இதனால் அருகிலிருக்கும் உறவினர்கள் வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். 

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் உறவினர்கள் உடனடியாக 108 மருத்துவ உதவியை வரவழைத்து பரிசோதித்த நிலையில், மாணவி முன்பே உயிரிழந்து விட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். 

பின் இதுகுறித்த தகவல் தெரியவர சம்பவ இடத்திற்கு விரைந்த அபிராமபுரம் காவல்துறையினர் மாணவியின் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மாணவியின் தற்கொலைக்கு என்ன காரணமாக இருக்கும்?, எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்று பல கோணங்களிலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement