16 வயசுதான் ஆகுது.. தூக்கில் தொங்கிய 11 ஆம் வகுப்பு மாணவன்.. ஆன்லைன் வகுப்பு பாடங்கள் புரியவில்லை என்பதால் விரக்தி..

16 வயசுதான் ஆகுது.. தூக்கில் தொங்கிய 11 ஆம் வகுப்பு மாணவன்.. ஆன்லைன் வகுப்பு பாடங்கள் புரியவில்லை என்பதால் விரக்தி..



Student commit suicide because of online class

ஆன்லைன் வகுப்பில் நடத்திய பாடங்கள் புரியவில்லை என்பதால் 11 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடந்துவரும்நிலையில், சென்னை கொளத்தூரை சேர்ந்த பிரவீன் என்ற 16 வயது மாணவர் ஒருவர், ஆன்லைன் வகுப்பில் நடத்திய பாடங்கள் புரியவில்லை எனக்கூறி வீட்டில் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், சம்மந்தப்பட்ட மாணவன் டேனிஷ் மெட்ரிகுலேஷன் என்ற பள்ளியில் படித்துவந்தநிலையில், தனக்கு ஆன்லைன் வகுப்புகள் புரியவில்லை என கூறி தவித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு, மாணவன் ஒருசில நாட்கள் பள்ளிக்கு சென்றுவந்துள்ளார்.

இந்நிலையில் மாணவன் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். மேலும், B.com படிக்கவேண்டும் என்ற தனது விருப்பம் நிறைவேறாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் இந்த துயர முடிவை எடுப்பதாக மாணவன் கடிதத்தில் எழுதி வைத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.