அதிகரித்துவரும் கொரோனா பரவல்! மூன்று மாவட்டங்களில் ஊரடங்கு தீவிரம்!

அதிகரித்துவரும் கொரோனா பரவல்! மூன்று மாவட்டங்களில் ஊரடங்கு தீவிரம்!


Strict 144

பெருநகரங்களில் கொரோனா அதிகம் பரவும் வாய்ப்பு இருப்பதால், சென்னை, கோவை, மதுரை மாநகராட்சிகளில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் 4 நாட்கள் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. இந்த வைரஸ் தொற்று இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக வருகிற மே 3ஆம் தேதி வரை நாடு தழுவிய ஊரடங்கு, நீட்டிக்கப்பட்டுள்ளது.

corona

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ஒரு மாதம் ஆகிவிட்ட போதிலும் கொரோனா பரவுவதை தடுக்க முடியவில்லை. ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி மக்கள் பல இடங்களில் வெளியே நடமாடுவதும், பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் நடந்து கொள்வதுமே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

சென்னை, கோவை, மதுரை போன்ற பெருநகரங்களில் அதிக அளவில் இந்த நோய்த் தொற்று பரவ வாய்ப்பு உள்ளதால், சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய 3 மாநகராட்சி பகுதிகளிலும், ஊரடங்கு முழுமையாக 26-4-2020 (நாளை) ஞாயிறு காலை 6 மணி முதல் 29-4-2020 புதன் இரவு 9 மணி வரை அமல்படுத்தப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.