
நான் வெற்றி பெற்றால்... ஓட்டு கேட்டு சென்ற மக்கள் நீதி மய்ய வேட்பாளரை துரத்தி சென்று கடித்த நாய்...
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19 ஆம் தேதி நடைபெற்றவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில் அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிரமாக மக்களிடம் ஓட்டு கேட்டு வருகின்றனர்.
அந்த வகையில் தாம்பரம் மாநகராட்சி 2வது வார்டில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் தினகரன் என்பவர் போட்டியிடுகிறார். தினகரன் நேற்று அனகாபுத்தூர் பாலாஜி நகரில் வீடு வீடாக சென்று அங்குள்ள மக்களிடம் ஓட்டு கேட்டுள்ளார்.
அப்போது தினகரன் அந்த பகுதியில் உள்ள 11 வது தெருவிற்கு சென்ற போது அங்குள்ள தெரு நாய் தினகரனை துரத்தி சென்று கடித்துள்ளது. காயமடைந்த தினகரன் மருத்துவமனைக்கு சென்று ஊசி போட்டு கொண்டுள்ளார்.பின் அப்பகுதி மக்களிடம் நான் வெற்றி பெற்றால் முதலில் தெரு நாய் தொல்லையை ஒழிப்பேன் என தினகரன் கூறியுள்ளார்.
Advertisement
Advertisement