அரசியல் தமிழகம்

சூப்பர் தலைவா!! முதல்வராக பொறுப்பேற்க இருக்கும் நிலையிலும் பழசை மறவாத ஸ்டாலின்!! வைரல் புகைப்படம்.

Summary:

முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ள ஸ்டாலின் தனது அண்டைவீட்டாரின் வீட்டிற்கு சென்று ஆசிர்வாதம் வ

முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ள ஸ்டாலின் தனது அண்டைவீட்டாரின் வீட்டிற்கு சென்று ஆசிர்வாதம் வாங்கினார்.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி காட்சிகள் மாபெரும் வெற்றிபெற்று விரைவில் ஆட்சி பொறுப்பை ஏற்கவுள்ளது. திமுக கட்சியின் தலைவர் திரு. முக. ஸ்டாலின் அவர்கள் விரைவில் தமிழகத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்கவுள்ளார்.

இந்நிலையில் தனது தந்தை வசித்துவந்த கோபாலபுரம் இல்லத்திற்கு இன்று காலை சென்ற மு.க.ஸ்டாலின், அங்கிருந்து புறப்படுவதற்கு வெளியே வந்தபோது, யாரும் எதிர்பாராத விதமாக எதிர்வீட்டுக்குச் சென்றார். சிறு வயதில் தான் விளையாடி திரிந்த வீடுகள், பால்ய நண்பர்கள் என்ற உரிமையில் அவர்களின் வீடுகளுக்கு சென்றார் ஸ்டாலின்.

பின்னர் அங்கிருந்த முதியவர்களிடம் நலம் விசாரித்ததோடு அவர்களின் ஆசீர்வாதத்தையும் பெற்று அங்கிருந்து புறப்பட்டார். சிறுவயதில் இருந்தே ஸ்டாலினை தங்களுக்கு தெரியும் என்றும், தமிழக முதல்வராக பொறுப்பேற்கவுள்ள ஸ்டாலின் தங்கள் வீட்டிற்கு வந்தது பெருமை எனவும், மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும், அண்டை வீட்டு மூதாட்டி ஒருவர் தெரிவித்தார்.

தமிழக முதல்வராக பொறுப்பேற்கவுள்ள நிலையில், பழசை மறக்காமல் தனது பால்ய  நண்பர்களின் வீட்டிற்கு சென்று நலம் விசாரித்துள்ளார் ஸ்டாலின்.


Advertisement