நான் ஸ்டாலின் பேசுறேன்.. கொரோனா வார் ரூமிற்கு திடீர் விசிட் அடித்த முதல்வர்! அசத்தல் செயல்களால் ஆச்சர்யம்!!stalin-visit-to-corono-war-room

தமிழக முதல்வர் ஸ்டாலின் இரண்டாவது அலையாக அதிதீவிரமெடுத்து வரும் கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். அவர் ஆட்சிக்கு வந்த நாளிலிருந்து கொரோனா தடுப்பு பணிகளிலேயே அதிக ஆர்வம் செலுத்தி வருகிறார். மேலும் அதற்காக நாளுக்கு நாள் பல அதிரடி அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறார்.

சென்னை அண்ணா சாலையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் கொரோனா வார் ரூம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு போன் செய்து உதவி கேட்பவர்களுக்கு, புகார் அளிப்பவர்கள் தொடர்பாக உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று இரவு திடீரென வார் ரூமிற்கு விசிட் அடித்துள்ளார்.

அங்கு பணிகளை மேற்பார்வையிட்ட அவர் ஆக்சிஜன் படுக்கை  உதவி கேட்டு போன் செய்த நபரிடம் பேசியுள்ளார். அவரிடம் நான் ஸ்டாலின் பேசுகிறேன் என்று கூறிய அவர் அந்த நபர் கேட்ட உதவிகளையும் செய்து தருவதாக உறுதியளித்து, உடனடியாக செய்தும் கொடுத்துள்ளார். ஸ்டாலினின் இந்த செயல்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.