அரசியல் தமிழகம்

இப்படியும் ஒரு முதல்வரா! குவிந்து வரும் பாராட்டுக்கள்.. ஏன் தெரியுமா?

Summary:

தற்பொழுது நிலுவையில் உள்ள பாடப்புத்தக பைகளை எந்த ஒரு திருத்தம் இல்லாமல் வழங்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் தெரிவித்தார்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை கட்டுக்குள் வந்த நிலையில் செப்டம்பர் 1 அன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. இதனையடுத்து பள்ளி மாணவர்களுக்கான இலவச பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டுக்கள் ஆகியவை வழங்கப்பட வேண்டும். இதில் முதலமைச்சரின் புகைப்படம் அச்சிட்டு பொது மக்களின் வரி பணத்தை வீணாக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இந்த வழக்கின் விசாரணையில் நீதிபதிகள் கூறுகையில், பள்ளி புத்தகப் பைகளிலோ அல்லது பாடப்புத்தகத்திலோ கட்சி தலைவர்களின் புகைப்படங்கள் அச்சிடக்கூடாது. இந்த நிலை இனிமேலும் தொடராமல் இருக்க தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என அறிவித்தனர். அப்போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் கூறுகையில், பள்ளி புத்தக பைகளில் தலைவர்கள் புகைப்படம் அச்சிடப்பதற்க்கு, தமிழக முதலமைச்சரான மு.க ஸ்டாலின் அவர்கள் விரும்பவில்லை.

தமிழக மக்களின் வரி பணத்தை வீணாக்கக்கூடாது. ஏற்கனவே நிலுவையில் உள்ள எதிர்கட்சி தலைவரான ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி புகைப்படம் எந்த ஒரு திருத்தம் செய்யாமல் அப்படியே மாணவர்களுக்கு வழங்க வேண்டும்  என ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது என தெரிவித்தார். இதனை கேட்டறிந்த நீதிபதிகள் பலரும் ,தமிழக முதலமைச்சரான திரு.மு.க ஸ்டாலின் அவர்களுக்கு பாராட்டுக்கள் தெரிவித்தனர்.


Advertisement