எஸ்.பி.பி-யின் உடல் நிலை தற்போது எப்படி உள்ளது? மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட தகவல்!spb-health-condition


தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழி படங்களில் ஆயிரக்கணக்கான பாடல் களை பாடிய பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் கடந்த 5ம் தேதி சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு, தொடர்ந்து  சிகிச்சை பெற்று வருகிறார்.  

இந்நிலையில் கடந்த 13ஆம் தேதி அவரது உடல் நிலை மிகவும் மோசமான நிலையில் அவர்  செயற்கை சுவாச கருவிகள் உதவியுடன் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக அறிக்கை வெளியானது. பின்னர் உடல்நிலை சீராக இருப்பதாகவும் கூறப்பட்டது. 

SPB

இந்நிலையில் ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் பலரும் அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டுமென பிரார்த்தனைகள் மேற்கொண்டு உருக்கமான வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். 

எஸ்.பி.பாலசுப்ரமணியனுக்கு செயற்கை சுவாசம் வழியாக ஆக்ஸிஜன் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் எஸ்.பி.பியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக நேற்று மருத்துவ அறிக்கை வெளியானது.