இறந்த தாயின் உடலை கதறியவாறே குப்பைத்தொட்டியில் தூக்கி வீசிய மகன்.! கண்கலங்க வைக்கும் பின்னணி சோகம்!! - TamilSpark
TamilSpark Logo
தமிழகம்

இறந்த தாயின் உடலை கதறியவாறே குப்பைத்தொட்டியில் தூக்கி வீசிய மகன்.! கண்கலங்க வைக்கும் பின்னணி சோகம்!!

தூத்துக்குடி பகுதியை சேர்ந்தவர் வசந்தி. இவரது கணவர் நாராயணசாமி. இவர்களுக்கு என்ற 29 வயதுமகன் உள்ளார். நாராயணசாமி வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் வசந்தி முத்துலட்சுமணனுடன் வசித்து வந்துள்ளார். 

மேலும் முத்துலட்சுமணன் கோவில் பூசாரியாக இருந்து, அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை கொண்டு குடும்பத்தை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த வசந்தி சமீபத்தில் திடீரென உயிரிழந்தார். இந்நிலையில் தனது தாயின் இறுதிச்சடங்கு செய்ய தன்னிடம் பணம் இல்லாத நிலையில் முத்துலட்சுமணன் இறந்துகிடந்த தனது தாயை குளிப்பாட்டி, அருகில் உள்ள குப்பை தொட்டியில் அவரது உடலை வீசியுள்ளார்.

இதனை தொடர்ந்து குப்பைகளை அகற்ற தொழிலாளர்கள் வந்தபோது அங்கு வசந்தியின் சடலம் கிடப்பதை கண்டு பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அவர்கள் போலீசாருக்கு இது குறித்து தகவல் அறித்தநிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 அதனை தொடர்ந்து அவர்கள் விசாரணை மேற்கொண்ட போது , முத்துலட்சுமணன்தான் தனது தாயின் உடலை தூக்கி வீசினார் என தெரியவந்தது. மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், மாநகராட்சி ஊழியர்கள் எடுத்து அடக்கம் செய்து விடுவார்கள் என எண்ணியே தாயின் சடலத்தை குப்பைத்தொட்டியில் போட்டுள்ளதாக கூறியுள்ளார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement
TamilSpark Logo