தனிமையில் வசித்த தாயை மனைவியுடன் சேர்ந்து எரிந்து கொன்ற மகன்... ஏன், எதற்கு தெரியுமா.? பதறவைக்கும் சம்பவம்...

தனிமையில் வசித்த தாயை மனைவியுடன் சேர்ந்து எரிந்து கொன்ற மகன்... ஏன், எதற்கு தெரியுமா.? பதறவைக்கும் சம்பவம்...


son-murder-his-mother-in-nillai-district

நெல்லை மாவட்டம் கீழநத்தம் ஊராட்சி பகுதியை சேர்ந்தவர் அரசம்மாள். 70 வயதான இவர் கணவர் இறந்த நிலையில் மகன் அண்ணாமலையுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அரசம்மாளுக்கும் அவரது மருமகள் அனிதாவுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் அண்ணாமலை பல முறை இருவருக்கும் சமாதானம் செய்து வைத்துள்ளார். இருப்பினும் சண்டை ஓயாத நிலையில் அரசம்மாள் அதே வீட்டில் ஒரு அறையில் தனியாக சமைத்து சாப்பிட்டு வந்துள்ளார். ஒரு நாள் அரசம்மாளிடம் அண்ணாமலை தாங்கள் வசித்து வரும் வீட்டை தனது பெயரில் எழுதி வைக்குமாறு கேட்டுள்ளார்.

Nellai District

அதற்கு அரசம்மாள் சம்மதிக்காத நிலையில் அண்ணாமலை மற்றும் அனிதா இருவரும் சேர்ந்து அரசம்மாளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் அண்ணாமலை அரசம்மாளை பிடித்து கீழே தள்ளியுள்ளார். அதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அரசம்மாள் உயிரிழந்துள்ளார்.

அதனையடுத்து அரசம்மாள் உடலை வீட்டில் அடுக்கி வைத்திருந்த விறகு கட்டைக்கு இடையே வைத்து எரித்துள்ளனர். அரசம்மாள் வசித்து வீட்டின் மாடி படி கீழே புகை வருவதை கண்டு அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தீயணைப்பு துறையினர் வந்து பார்த்த போது அரசம்மாள் கறிகட்டையாக கிடந்துள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி கணவன் மனைவி இருவரையும் கைது செய்தனர்.