தமிழகம்

போதையின் உச்சம்..! குடிபோதையில் பெற்ற தாயை அடித்துக் கொலை செய்த மகன்..! அதிர்ச்சி சம்பவம்..!

Summary:

Son killed own mom near madurai

தலைக்கேறிய குடிபோதையில் பெற்ற தாயை மகனே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள வேலூர் என்னும் கிராமத்தை சேர்ந்தவர் ஹோட்டல் தொழிலாளி ஜெயச்சந்திரன். ஜெயச்சந்திரன் மதுவுக்கு அடிமையாகிய நிலையில் தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வருவது வழக்கம். அந்த வகையில் நேற்று இரவு வழக்கம் போல் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார் ஜெயச்சந்திரன்.

இந்நிலையில் ஜெயச்சந்திரன் அவரது தாய் முனியாயியிடம் குடிபோதையில் தகராறு செய்ததோடு அங்கிருந்த கம்பு கல்லால் தனது தாயை கொடூரமாக தாக்கியுள்ளார். இதில் முனியாயி சம்பவ இடத்திலையே உயிரிழந்தார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் ஜெயச்சந்திரனை கைது செய்துள்ளார் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement