மது குடிப்பதற்காக தாயிடம் பணம் கேட்ட நபர்.! ஆத்திரத்தில் அடித்துக்கொன்ற மகன்.!

மது குடிப்பதற்காக தாயிடம் பணம் கேட்ட நபர்.! ஆத்திரத்தில் அடித்துக்கொன்ற மகன்.!


son killed man for torture his mom

சென்னை திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்தவர் உமாமகேஸ்வரி. இவருக்கு 24 வயதில் விக்னேஸ்வரன் மகன் இருந்துள்ளார். இவர்களுடன் உமா மகேஸ்வரியின் உறவினரான ஏழுமலை என்பவர் வசித்து வந்துள்ளார். உமாமகேஸ்வரி, ஏழுமலை இருவரும் கூலி வேலை செய்து வந்துள்ளனர்.

இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு ஏழுமலை, மது அருந்துவதற்காக உமாமகேஸ்வரியிடம் ரூ.500 கேட்டுள்ளார். அப்போது அங்கிருந்த விக்னேஸ்வரன், எதற்காக எனது தாயிடம் பணம் கேட்கிறாய்? என்று கேட்டு ஏழுமலையிடம் தகராறு செய்துள்ளார். மேலும் ஆத்திரத்தில் ஏழுமலையை கையால் அடித்துள்ளார்.

இதனையடுத்து அனைவரும் தூங்கி விட்டனர். இந்தநிலையில் நேற்று காலை எழுந்து பார்த்தபோது ஏழுமலை இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், இதுதொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்து விக்னேஸ்வரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.