சாவுறதுக்கு முன்னாடி அந்த பெத்த மனசு எவ்வளவு வலிச்சிருக்கும்!! பெத்த தந்தையை கொலை செய்த மகன்.. அதிர்ச்சி காரணம்..



son-killed-father-who-fight-with-him

குடிபோதையில் பெத்த தந்தையை மகனே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் அருகே உள்ள வீசாணம் அன்னை சத்யா நபர் பகுதியை சேர்ந்தவர் வையாபுரி.  60 வயதாகும் வையாபுரி ஒரு கூலித்தொழிலாளி. இவருக்கு நல்லம்மாள் (55) என்ற மனைவியும், வெங்கடேஷ் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணமும் முடிந்துவிட்டது.

இந்த நிலையில் நேற்று வையாபுரி தனது வீட்டின் பின்புறம் உள்ள கொட்டகையில் கழுத்து அறுக்கப்பட்டு கொலைசெய்யப்பட்ட கிடந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் மோப்ப நாயை வரவைத்து விசாரணை நடத்தினர். அதில் மோப்ப நாய் வீட்டை விட்டு வெளியே எங்கும் செல்லவில்லை, அதேநேரம் வீட்டின் அருகே இரத்த கரையுடன் அருவாள் ஒன்றையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

இதனால் வையாபுரியின் மகன் வெங்கடேஷ் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. வெங்கடேஷை அழைத்து போலீசார் விசாரித்ததில் தனது தந்தையை கொலை செய்தது தான்தான் என வெங்கேஷ் ஒப்புக்கொண்டார். தனது மனைவி தன்னை விட்டு பிரிந்துசென்ற வெங்கடேஷ் தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.

தான் மது குடித்துவிட்டு வருவதை தந்தை கண்டித்ததால் ஆத்திரத்தில் வெட்டி கொலை செய்ததாக வெங்கடேஷ் தெரிவித்து உள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் மேலும் விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.