புதுக்கோட்டையில் கொரோனாவுக்கு பலியான தாய்.! அதிர்ச்சியில் மகன் மரணம்.! சோக சம்பவம்.!

புதுக்கோட்டையில் கொரோனாவுக்கு பலியான தாய்.! அதிர்ச்சியில் மகன் மரணம்.! சோக சம்பவம்.!


son-died-for-mom-death-in-pudukkottai

தமிழகத்தில் கொரோனா வைரஸின் கோரத்தாண்டவம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தநிலையில், கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது. தற்போது தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று 2-வது அலை தீவிரமடைந்து வருகிறது. ஆரம்பத்தில் நகர்ப்புறங்களில் மட்டும் அதிகரித்துவந்த கொரோனா பாதிப்பு, தற்போது கிராமப்புறங்களிலும் வேகமெடுத்து வருகிறது. 

இந்தநிலையில், புதுக்கோட்டை மாவட்ட நகர பகுதியில் அதிகரிக்கும் கொரோனா தொற்றால் பல இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு நகராட்சி மற்றும் சுகாதாரத் துறையினர் தடுப்புகள் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள நச்சாந்துபட்டி பகுதியை சேர்ந்தவர் நசீர் முகமது மற்றும் அவரது தாய் முகமது அம்மாள் ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று உறுதியானது.

இதனையடுத்து இருவரும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் நசீர்முகமது குணம் அடைந்து வீடு திரும்பினார். ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முகமது அம்மாள் நேற்று முன்தினம் சிகிச்சைபலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த நசீர் முகமது அதிர்ச்சியில் நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்து சம்பவ இடத்திேலயே பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.