தமிழகம்

தந்தை இறந்துவிட்டார்..! இதுதான் அவரோட கடைசி ஆசை..!யாருக்கும் தெரியாமல் மகன் செய்த காரியம்..!

Summary:

Son Burial his father dead body inside house

உடல்நலக்குறைவால் உயிரிழந்த தனது தந்தையை அவரது மகன் தனது வீட்டிற்கு உள்ளேயே வைத்து அடக்கம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

பெரம்பலூர் மாவட்டம் அம்மாபாளையம் பகுதியில் உள்ள களரம்பட்டி என்னும் கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி என்ற முதியவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு நேற்று உயிரிழந்துள்ளார். 

இந்நிலையில் உயிரிழந்த தனது தந்தையின் உடலை அவரது மகன் பாலகிருஷ்ணன் தனது வீட்டிற்கு அருகிலேயே அடக்கம் செய்ய ஏற்பாடு செய்துள்ளார். ஆனால் ராமசாமியின் உடலை மயானத்தில் தான் அடக்கம் செய்ய வேண்டும், வீட்டிற்கு அருகில் அடக்கம் செய்யக்கூடாது என அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் அந்த பகுதி மக்களுக்கு தெரியாமல் இறந்து போன தனது தந்தையின் உடலை பாலகிருஷ்ணன் தந்து வீட்டின் ஒரு அறைக்குள் சடலத்தின் மீது திருநீறை பூசி அடக்கம் செய்துள்ளார். இதனை அறிந்த அந்த பகுதி மக்கள் இது குறித்து காவல்துறையினரிடம் புகார் கொடுத்துள்ளனர். 

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பல கிருஷ்ணாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவரது தந்தையின் உடலை மயானத்தில் அடக்கம் செய்ய முயற்சி செய்துள்ளனர். ஆனால் அதற்கு சம்மதம் தெரிவிக்காத பாலகிருஷ்ணன் தொடர்ந்து அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். 

இதனையடுத்து போலீசார் பாலகிருஷ்ணாவை வலுக்கட்டாயமாக அங்கிருந்து வெளியேற்றி பின்னர் உடலை கைப்பற்றி மயானத்திற்கு கொண்டு சென்று அடக்கம் செய்தனர். தனது தந்தையின் கோரிக்கைப்படி அவரது உடலை வீட்டிலேயே அடக்கம் செய்ததாக பாலகிருஷ்ணா போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement