பெற்ற தாய் என்று கூட பார்க்காமல் மகன் செய்த செயல்.! பரிதாபமாக உயிரிழந்த தந்தை.!son attaked his parrents

சென்னை கொரட்டூர் அடுத்த பாடி அவ்வை நகர் பகுதியை சேர்ந்தவர் சங்கர். 34 வயது நிரம்பிய சங்கருக்கு திருமணமாகி மனைவி பிரிந்து சென்று விட்ட நிலையில், தனது  பெற்றோருடன் வசித்து வந்தார். சங்கரின் தந்தை சுந்தரமூர்த்தி வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவால் வீட்டில் இருந்தபடி சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 12-ஆம் தேதி சங்கர் தனது தாய் ராணியிடம் மதுகுடிக்க பணம் கேட்டுள்ளார். தாய் பணம் இல்லை என்று கூறியதால் பெற்ற தாய் என்று கூட பார்க்காமல் அடித்துள்ளார் சங்கர். இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சுந்தரமூர்த்தி கட்டிலில் எழுந்து வந்து சங்கரை தடுக்க முயன்றார். ஆனால் மது போதையில் இருந்த சங்கர் சுந்தரமூர்த்தியை வேகமாக தள்ளி விட்டதாக கூறப்படுகிறது.

இதில் கீழே தவறி விழுந்த சுந்தரமூர்த்தி மயக்கமடைந்துள்ளார். இதனையடுத்து சுந்தரமூர்த்தியை அக்கம்பக்கத்தினர் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுந்தரமூர்த்தி நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து சங்கரின் தாய் ராணி கொடுத்த புகாரின்பேரில், கொரட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.