தமிழகம்

7 மாத கர்ப்பிணி மனைவியை பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு அழைத்துவந்த சாப்ட்வேர் என்ஜினீயர்! அங்கு நடந்த கொடூர சம்பவம்!

Summary:

software engineer killed

சென்னை அயனாவரத்தைச் சேர்ந்தவர் சையத் தன்வீர். இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் படித்து வந்தார். அதே கல்லூரியில் மதுரையைச் சேர்ந்த ஷில்பா என்ற பெண்ணும் படித்து வந்துள்ளார். இந்தநிலையில் இருவருக்குமிடையே காதல் ஏற்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் வெவ்வேறு மதத்தினை சேர்ந்தவர்கள் என்பதால், சையத் தன்வீர் -ஷில்பாவின் காதலுக்கு பெற்றோர் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. ஆனாலும் அவர்கள் எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு சையத் தன்வீர் அயர்லாந்தில் வேலை செய்து வந்தார். ஷில்பாவும் கணவருடன் தங்கி வேலை செய்து வந்தார். இந்தநிலையில் ஷில்பா 7 மாத கர்ப்பமாக இருந்துள்ளார்.

death க்கான பட முடிவு
இந்தநிலையில் ஷில்பாவை பிரசவத்திற்கு தாய் வீட்டில் விடுவதற்காக சையத் தன்வீர் தனது மனைவியை அழைத்துக்கொண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டைக்கு வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த 12-ஆம் தேதி காலை பெங்களூருக்கு சென்று வருவதாக தனது மனைவியிடம் கூறிவிட்டு சையத் தன்வீர் சென்றார். இதனையடுத்து அவரது செல்போன் சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருந்தது.

இதனையடுத்து ஷில்பா காவல்நிலையத்தில் புகார் செய்தார். அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் ராயக்கோட்டை ரெயில் நிலையம் அருகில் ரயில் தண்டவாளத்தில் சையத் தன்வீர் பிணமாக கிடந்தார். அவரது தலையின் பின்பகுதி பயங்கர ஆயுதங்களால் தாக்கப்பட்டும், உடலில் பல இடங்களில் ரத்தமாகவும் இருந்தது.

இதுபற்றி தகவல் அறிந்தத போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சையத் தன்வீர் காதல் திருமணம் செய்ததால் அவரது குடும்பத்துடன் பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சையத் தன்வீரை கொலை செய்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


Advertisement