தமிழகம் லைப் ஸ்டைல்

#Video: நண்டு வறுக்க தெரியுமா? கோழி வறுக்க தெரியுமா? - இந்தா செத்தப்பயலே உப்புமா..!

Summary:

#Video: நண்டு வறுக்க தெரியுமா? கோழி வறுக்க தெரியுமா? - இந்தா செத்தப்பயலே உப்புமா..!

காதலுக்கு கண்ணில்லை, அது பேதம் பார்க்காது என்று காதலுக்கு பல அர்த்தங்கள் கொடுத்து, அதனை முக்கியத்துவப்படுத்தி இன்றைய வாழ்நாட்கள் பலருக்கும் நகர்ந்து வருகிறது. இதில், காதலர்களுக்குள் நடக்கும் காரசார விவாதம், புரிதல், தனிமை, அன்பு, மகிழ்ச்சி என ஒவ்வொன்றும் அடங்கும். 

காதல் ஜோடிகள் தாங்கள் காதல் வயப்படும் போது ஒருவரையொருவர் நொடிகூட பிரிய இயலாமல் தவிப்பார்கள். இருவரும் சந்திக்கும் போது தங்களுக்குள் அன்பை பரிமாறி, செல்ல சண்டையுடன் அந்தந்த நொடிகளை நினைவுகளாக கடத்துவார்கள். இதில் புரிதல் என்பது தான் அதன் ஆணிவேராக இருக்கிறது.

 

இந்த நிலையில், பொதுவாக உப்புமா என்ற விஷயம் சிலரால் விரும்பப்படும், வெறுக்கப்படும். அது அவரவரின் தனிப்பட்ட விருப்பங்களை பொறுத்தது. சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்று வெளியாகி கடந்த சில நாட்காகவே வைரலாகி இருக்கிறது. 

அந்த வீடியோவில், காதலன் தனது காதலியை நோக்கி, "நண்டு வறுக்க தெரியுமா? கோழி வறுக்க தெரியுமா? ஆட்டுக்காலு சூப்பு வைக்க தெரியுமா?" என்ற சாமி திரைப்படத்தின் பாடல் வரியில் உள்ள கேள்வியுடன் முன்னேறுகிறார். எதிரில் உள்ள காதலியோ, உப்புமா பொட்டலத்தை தூக்கி காதலனின் கைகளில் வைத்தபடி, தனது பதில்களை தெரிவிக்கிறார். 


Advertisement