சினிமா

ஆத்தாடி.. பாட்டிலுக்குள் கிடப்பது அதுதானா?? பாதி மது பாட்டிலை காலி செய்தவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!! அலறிய குடும்பத்தினர்!

Summary:

அரியலூர் மாவட்டம் தாபழூர் அருகேயுள்ள சுத்தமல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். 36 வயது நிற

அரியலூர் மாவட்டம் தாபழூர் அருகேயுள்ள சுத்தமல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். 36 வயது நிறைந்த அவர் சில தினங்களுக்கு முன்பு டாஸ்மாக்கில் மது பாட்டில் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்பொழுது செல்லும் வழியிலேயே அவர் பாதி மதுவை குடித்துள்ளார். மேலும் மீதியை வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளார்.

பின்னர் வீட்டிற்கு சென்ற அவர் வீட்டில் டம்ளர் ஒன்றை எடுத்து குடிப்பதற்காக  மதுவை ஊற்றியுள்ளார். அப்பொழுது அந்தப் பாட்டிலுக்குள் கட்டுவிரியன் பாம்பு குட்டி ஒன்று இறந்து கிடந்துள்ளது. அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சுரேஷ் உடனே இது குறித்து குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். மேலும் அப்பொழுது அவருக்கு லேசான மயக்கம் ஏற்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து அலறிய குடும்பத்தினர்கள் அவரை பக்கத்தில் இருந்த அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சுரேஷ் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த செய்தி பரவி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement