அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
முருகா என் வீட்டிற்கு வந்துட்டியா! படுக்கையறைக்கு வந்த நாகபாம்பு! கையெடுத்து கும்பிட்டு வணங்கி பெண் செய்த வேலையை பாருங்க!
கடலூரில் நடந்த ஒரு அதிர்ச்சியும் அதே நேரத்தில் வியப்பும் அளிக்கும் சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது. வீட்டு படுக்கையறைக்கு பாம்பு நுழைந்ததும், அந்த வீட்டின் பெண் பாம்பை வணங்கி உரையாடிய காட்சி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
பாம்பு நுழைந்த அதிர்ச்சி
கடலூர் முதுநகர் அருகே உள்ள வண்டிப்பாளையம் பகுதியில் ஒரு வீட்டின் படுக்கையறையில் பாம்பு ஒன்று புகுந்தது. அதை கண்ட வீட்டு பெண், 'முருகா, நேற்று பூஜை செய்தேனே, இன்று என் வீட்டிற்கு வந்திட்டியா!' என கூறி, கையெடுத்து வணங்கினார். இந்த காட்சி அங்கு இருந்தவர்களால் பதிவுசெய்யப்பட்டது.
பாம்புக்கு பூஜை
பின்னர், ஒரு நபர் கம்பியால் பாம்பை பிடித்து பாதுகாப்பாக ஒரு டப்பாவில் அடைத்தார். ஆனால், அந்த குடும்பத்தினர் 'நல்ல பாம்பு' வீட்டிற்குள் வந்துள்ளது என்பதால், அது சாமி என நம்பி, கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்தனர்.
இதையும் படிங்க: புதுப்பெண்ணிடம் முதலிரவு அன்று கர்ப்ப பரிசோதனை செய்ய சொன்ன மாப்பிள்ளை! 2 மணி நேரமாக.. என்ன காரணம்னு பாருங்க! கடைசியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
சமூக வலைதளங்களில் வைரல்

வீட்டுக்குள் நுழைந்த பாம்புக்கு உரிமையாளர் உடனே பூஜை செய்த இந்த அபூர்வ சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு, பல்வேறு கருத்துக்களை உருவாக்கியுள்ளது.
கடலூரில் நடந்த இந்த வினோத சம்பவம், மக்கள் பாம்பைப் பற்றிய பாரம்பரிய நம்பிக்கைகளை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியதாக சமூக வலைதள பயனர்கள் குறிப்பிடுகின்றனர்.

