தமிழகம்

ரேஷன் கடையில் வரிசையாக நின்ற மக்கள்.. திடீரென அலறியடித்து ஓட்டம்.. என்னனு பார்த்தா விஷயமே வேற..

Summary:

ரேஷன் கடைக்குள் புகுந்த நாக பாம்பை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் பிடித்து காட்டுக்குள் கொண்ட

ரேஷன் கடைக்குள் புகுந்த நாக பாம்பை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் பிடித்து காட்டுக்குள் கொண்டுபோய் விட்டனர்.

பழனி அருகே உள்ள ரயில்வே பீடர் சாலையில் அமைந்துள்ள ரேஷன் கடை ஒன்றில் அந்த பகுதி மக்கள் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக 5 அடி நீளம் கொண்ட கோதுமை நாக பாம்பு ரேஷன் கடைக்குள் இருந்த கூட்டத்திற்குள் புகுந்துள்ளது.

இதனால் அச்சமடைந்த மக்கள் அங்கிருந்து தலைதெறிக்க ஓடினர். பின்னர் இந்த தகவல் தீயணைப்பு வீரர்களுக்கு தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், கடைக்குள் புகுந்த நாக பாம்பை பத்திரமாக மீட்டு, அருகில் இருந்த காட்டு பகுதிக்குள் கொண்டுபோய் விட்டனர்.

இந்நிலையில் ரேஷன் கடைக்குள் புகுந்த நாக பாம்பால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


Advertisement