பாம்பிடமிருந்து எஜமானரை காத்த நாய் - நெகிழ வைக்கும் நிகழ்வு.

பாம்பிடமிருந்து எஜமானரை காத்த நாய் - நெகிழ வைக்கும் நிகழ்வு.


Snake dog

தஞ்சாவூர் மாவட்டம், வேங்கராயன்குடிகாடு பகுதியை சேர்ந்தவர் நடராஜன். இவர் கடந்த நான்கு ஆண்டுகளாக நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். மேலும் அந்த நாய்க்கு பப்பி என பெயரிட்டு அதை மிகவும் பாசத்தோடு வளர்த்து வந்துள்ளார். வழக்கமாக அதை அவர் நடைபயிற்சிக்கு அழைத்துச் செல்வது வழக்கம்.

அதேபோல் ஒரு நாள் தன் செல்ல பிராணியுடன் நடராஜன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு முள் புதரிலிருந்து கருநாகம் ஒன்று படம் எடுத்து அவரை சீண்டி உள்ளது. இதனை கண்ட நாய் உடனே பாய்ந்து சென்று அந்த நாயை கடித்து சாக செய்துள்ளது.

snake

நடராஜன் தன் நாயை தூக்கி கொண்டு வீடு வந்துள்ளார். வீட்டிற்கு வந்த சிறிது நேரத்திலேயே உயிர் இறந்துள்ளது. இதனால் வீட்டின் உரிமையாளர் மிகவும் வேதனையுடன் உள்ளார். இந்நிகழ்வு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

snake