தமிழகம்

6 வயது சிறுவனை கடித்த நல்லபாம்பு.! தந்தையிடம் ஓடிய சிறுவன்.! அடுத்து நடந்த பரிதாபம்.!

Summary:

6 வயது சிறுவனை கடித்த நல்லபாம்பு.! தந்தையிடம் ஓடிய சிறுவன்.! அடுத்து நடந்த பரிதாபம்.!


படப்பை அடுத்த நடரசன்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராமு. இவருக்கு 6 வயதில் சச்சின் என்ற குழந்தையும் இரண்டரை வயதில் விக்னேஷ் என்ற குழந்தையும் உள்ளனர். இந்நிலையில், நேற்று சச்சின் மற்றும் விக்னேஷ் இருவரும் வீட்டின் அருகில் உள்ள வயல்வெளியில் விளையாடிக்கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென எதிர்பாராத விதமாக நல்லபாம்பு சச்சினை கடித்துள்ளது. இதையடுத்து சச்சின் தனது தந்தையிடம் சென்று, அப்பா என்னை பாம்பு கடித்துவிட்டது என கூறியுள்ளான். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ராமு உறவினர்களுடன் சேர்ந்து சச்சினை அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இந்நிலையில், சிறுவன் சச்சின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சச்சினின் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 6 வயது சிறுவன் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement