தமிழகம் இந்தியா

நடுவானில் பறந்த விமானத்தில் திடீரென வந்த புகை! விமானியின் சாமர்த்திய செயல்!

Summary:

Smoke in midair flight

கோவையில் இருந்து சென்னை வந்த இண்டிகோ விமானத்தின் கார்கோ பகுதியில் இருந்து திடீரென புகை வந்ததால் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

சென்னை உள்நாட்டு விமான முனையத்துக்கு கோவையில் இருந்து இண்டிகோ விமானம் வந்தது. அந்த விமானத்தில் 169 பயணிகளும், 5 விமான ஊழியர்களும் பயணித்துள்ளனர். சென்னை விமான நிலைய வான் எல்லையில் நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தின் பின்பகுதியில் புகை வந்துள்ளது. இதனையடுத்து திடீரென எச்சரிக்கை அலாரம் ஒலித்தது. 

இதைக்கண்ட விமானி, உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். இதனையடுத்து விமானத்தை வேகமாக இயக்கிய விமானிகள், விமானத்தை 18 நிமிடங்கள் முன்னதாகவே தரையிறக்கினர்.

இதனையடுத்து விமானத்தில் இருந்த பயணிகளும், ஊழியர்களும் பாதுகாப்பாக விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டனர். இதையடுத்து விமானத்தில் எங்கிருந்து புகைவந்தது என்று விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


Advertisement