அடிக்காம ..குணமாக சொல்லணும் , அழுதுகொண்டே பேசும் அழகுக்குட்டியின் வைரலாகும் வீடியோ .!



small baby talking viral video

சேட்டை செய்தால் அடிக்கக் கூடாது. குணமாக அன்பாக வாயில் சொல்ல வேண்டும் என சிறுமி பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வலம் வருகிறது.

 சமீபத்தில் சமூகவலைதங்களில் வீடியோ ஒன்று வெளியானது. அதில், சேட்டை செய்த சிறுமியை அடித்து மிரட்டிய அவளது தாய் அந்த குழந்தையை கீழே அமர வைத்து மனசு கேட்காமல்  அவரிடம் ‘சேட்டை செய்வது தப்பா இல்லையா?’ என கேட்கிறார்.

அதற்கு சிறுமி தப்புதான். ஆனால், அடித்தாலும் தப்புதான்.. சேட்டையே செய்தாலும் அடிக்கக் கூடாது. குணமாக, அன்போடு வாயில் சொல்ல வேண்டும்’ என அழுது கொண்டே பேசியது.

அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி  வலம் வந்து கொண்டிருக்கிறது.
 
இதை பார்த்த நெட்டிசன்கள்அந்த சிறுமியை கொஞ்சி வருகின்றனர்.