நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 93-வது பிறந்த நாள் விழா.! துணை முதல்வர், அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 93-வது பிறந்த நாள் விழா.! துணை முதல்வர், அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை!



sivaji ganesan birthday

சிவாஜி கணேசன் புகழ் பெற்ற தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவரது இயற்பெயர் விழுப்புரம் சின்னையா மன்ராயா் கணேசமூர்த்தி ஆகும். இவர், பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். இவரது சொந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டத்தில், தஞ்சாவூர் தாலுக்காவில் இருக்கும் சூரக்கோட்டை எனும் கிராமமாகும்.

சிவாஜி கணேசன், திரையுலகுக்கு வரும் முன்னர் மேடை நாடகங்களில் நடித்து வந்தார். சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்த கணேசனின் நடிப்புத்திறனை மெச்சிய தந்தை பெரியார், அவரை 'சிவாஜி' கணேசன் என்று அழைத்தார். அன்றிலிருந்து அந்த பெயரே நிலைத்து நீடித்தது. இவர் நடித்த வீரபாண்டிய கட்டபொம்மன், இராஜராஜ சோழன், கப்பலோட்டிய தமிழன் போன்ற தேசத் தலைவர்களின்பாத்திரங்களை ஏற்றுத் திறம்படச் செய்தார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 93-வது பிறந்த நாள் விழா .  சென்னை அடையாறு மணிமண்டபத்தில், சிவாஜி கணேசன் படத்திற்கு துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தியுள்ளனர்.

sivaji

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு பெருமை சேர்க்கும் வகையில்,  சென்னை அடையாறில் அவருக்கு மணிமண்டபம் கட்டப்பட்டது. இந்த மண்டபம் கடந்த 2017-ம் ஆண்டு சிவாஜி கணேசனின் 90-ஆவது பிறந்த நாளையொட்டி தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தால் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிலையில், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 93-வது பிறந்தநாள் தமிழகம் முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 93-வது பிறந்தநாளை முன்னிட்டு அடையாறில் உள்ள சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் சிவாஜி கணேசன்  பேரனும், நடிகருமான விக்ரம் பிரபு மற்றும் சிவாஜி கணேசனின் குடும்பத்தினர் சமூக இடைவெளியை கடைபிடித்து சிவாஜி கணேசன் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.