தமிழகம்

உயிரோடு நள்ளிரவில் ஜீவசமாதி ஆகப்போவதாக கூறிய சாமியார்! காத்திருந்த மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Summary:

Sivagankai man jeeva samaathi news

சிவகங்கை மாவட்டத்தில் உயிரோடு ஜீவசமாதி அடைய போவதாக கூறிய சாமியார், அவரது மகன் மற்றும் சிலர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இருளப்பன் என்ற 80 வயது நபர் ஒருவர் ஜோசியம், ஜாதகம் பார்ப்பதோடு அருள்வாக்கு கூறி வந்துள்ளார். இதனால் அந்த பகுதி மக்கள் இவரை சாமியார் என அழைத்துவந்துள்னனர்.

இந்நிலையில் 80 வயதான இருளப்பன் கடந்த மாதம் தான் ஜீவசமாதி அடையப்போவதாக கூறி ஒரு மாத காலம் உணவு உண்ணாமல் நீர் மட்டுமே அருந்தி வந்துள்ளார். இதனை அடுத்து அவர் சொன்ன அந்த தேதியும் வந்துள்ளது. இருளப்பன் ஜீவசமாதி அடைய போவதை காண ஏராளமான மக்கள் திரண்டனர்.

இந்த செய்தி அறிந்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர், மற்றும் பல்வேறு காவல்துறை உயர் அதிகாரிகளும் இதனை காண நேரில் வந்திருந்தனர். இந்நிலையில் நள்ளிரவு 12 மணி முதல் காலை 5 மணி வரை இருளப்பன் ஜீவசமாதி அடைய போவதாக எண்ணி மக்கள் காத்திருந்தனர்.

ஆனால், இன்று நேரம் அதிகமாகிவிட்டதால் மற்றொரு நாள் தான் ஜீவசமாதி அடையப்போவதாக இருளப்பன் அறிவித்தார். இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். பொய்யான தகவலை கூறி கூட்டம் சேர்த்து இருளப்பன் மற்றும் அவரது மகன் பொதுமக்களிடம் பணம் வசூலித்ததாக கூறி போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்துள்ளனர்.


Advertisement