கணவன் - மனைவி வாக்குவாதத்தில் பயங்கரம்.. ஒரே அடி.. துள்ளத்துடிக்க உயிரிழந்த மனைவி.!
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை, புதூர் சத்திரத்தில் இலங்கை தமிழர்கள் முகாம் உள்ளது. இந்த முகாமில் வசித்து வருபவர் விமலராஜ். இவரின் மனைவி பிரியா.
தம்பதிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக அவ்வப்போது வாக்குவாதம் மற்றும் சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நேற்றும் தம்பதிகளுக்கு இடையே சண்டை நடந்துள்ளது.
அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றவே, விமலராஜ் கட்டையால் பிரியாவை தாக்கியுள்ளார். இதனால் படுகாயமடைந்த பிரியா நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த தேவகோட்டை காவல் துறையினர், விமல்ராஜை கைது செய்து விசாரணைக்கு பின்னர் சிறையில் அடைத்தனர்.