தமிழகம் சினிமா Covid-19

74 வயதாகும் பாடகர் எஸ்பி. பாலசுப்ரமணியத்துக்கு கொரோனா தொற்று..! அவரே வெளியிட்ட வீடியோ இதோ.!

தனக்கு லேசான கொரோனா பாதிப்பு இருப்பதாகவும், மருத்துவமனையில் ஓய்வு எடுத்துவருவதாகவும் பாடகர் எஸ்பி. பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸினால் அனைத்து தரப்பு மக்களும் வெகுவாக பாதிக்கப்பட்டுவருகின்றனர். இந்நிலையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள பாடகர் எஸ்பி. பாலசுப்ரமணியம், "தனக்கு சளி, காய்ச்சல் தொந்தரவு இருந்ததாகவும், அதற்காக மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது குறைந்த அளவில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்".

மேலும், மருத்துவர்கள் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு கூறியதாகவும், ஆனால் நான் மருத்துவமனையிலையே அனுமதியாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். சளி, காய்ச்சல் உள்ளது. மற்றபடி நான் நலமாக உள்ளேன், ஓய்வில் இருப்பதால் நிறைய தொலைபேசி அழைப்புகளை எடுத்து  பேச முடியவில்லை, நான் நலமாக இருக்கிறேன், உங்கள் அன்புக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

தற்போது 74 வயதாகும் பாடகர் எஸ்பி. பாலசுப்ரமணியம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement