ரூ.2000 உயர்ந்த வெள்ளி.. தங்கத்தை தூக்கி சாப்பிட வருகிறது.. முதலீட்டாளர்கள் கணக்கீடு.!



silver price today march 6 2025

தங்கத்தின் விலை படுவேகமாக உயர்ந்து வருகிறது. இது பலருக்கும் வருத்தத்தை கொடுத்துள்ளது. முதலீட்டாளர்களுக்கு தங்க விலை உயர்வு மகிழ்ச்சியை கொடுக்கிறது. ஆனால், டொமஸ்டிக் பயன்பாட்டாளர்களுக்கு இது மிகப் பெரிய அதிர்ச்சியை தான் ஏற்படுத்தி இருக்கிறது. 

தங்கம் ஒரு புறம் என்றால் தற்போது வெள்ளியும் வேகமாக உயர்ந்து வருகிறது. முன்பெல்லாம் வெள்ளி விலையில் பெரிய அளவில் மாற்றங்கள் இருக்காது. ஆனால், தற்போது 4 நாட்களுக்குள் 2000.ரூ கிலோவுக்கு உயர்ந்துள்ளது. கடந்த மார்ச் 3ம் தேதி ஒரு கிராம் வெள்ளியின் விலை ₹.105.

silver

ஆனால் அடுத்த நாளே ரூ.106 ரூபாய்க்கு உயர்ந்தது. இந்த நிலையில், மார்ச் 6-ம் தேதியான இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.107 ஒரு கிலோ வெள்ளி 1000 ரூபாய் உயர்ந்து ரூ.10,7000 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 

இதையும் படிங்க: ஒரே நாளில் ₹.1000 உயர்ந்த வெள்ளி விலை.. தங்கத்தை தொடர்ந்து கிடுகிடுவென அதிகரிப்பு.! 

கடந்த 4 நாட்களில் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.2000 உயர்ந்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ஒருபுறம் முதலீட்டாளர்கள் தங்கத்தை போல வெள்ளிக்கும் விரைவில் மவுசு அதிகரிக்கும் என்று கணிக்கின்றனர்.

இதையும் படிங்க: செங்கல்பட்டு: ஓடும் பள்ளி வாகனத்தில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; உதவியாளர் அதிர்ச்சி செயல்.!