தமிழகம் Covid-19

இனி வாரத்தில் மூன்று தினங்களுக்கு மட்டுமே கடைகள் திறக்கப்படும்! மாவட்ட ஆட்சியர் அதிரடி!

Summary:

Shops opened three days in one week

சீனாவில் தொடங்கியகொரோனா வைரஸ் தொற்றால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1லட்சத்தை கடந்துவிட்டது.கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் கொரோனா பரவல் பரவியது. பிரதமர் மோடி சரியான நேரத்தில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கை அமல்படுத்தினார். டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்களால் கொரோனா பரவல் இந்தியாவிலும் சற்று அதிகரிக்க தொடங்கியது.

அதேபோல் தமிழகத்திலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இந்தநிலையில், 14ஆம் தேதிக்கு பிறகு தமிழகத்தில் ஊரடங்கு நீடிக்கப்படுமா என்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. 

தமிழகத்தில் பல மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், ஒருசில மாவட்டங்களில் கொரோனா பரவாமல் இருக்க தீவிரமாக தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தவகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்றினை பரவாமல் கட்டுப்படுத்திட தூய்மைப்படுத்தும் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

அதன் தொடர்ச்சியாக நோய் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து மளிகை கடைகளும் இனி மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை வாரத்தில் திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய மூன்று தினங்களில் மட்டும் செயல்பட வேண்டும் எனவும், கடைகள் ஏற்கனவே நடைமுறையில் உள்ள கால அளவான காலை 6 மணிமுதல் மதியம் ஒரு மணிவரை மட்டுமே திறந்திருக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதனை கடைபிடிக்காத மற்றும் மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 


Advertisement