தமிழகம்

இனி தப்பவே முடியாது காமவெறியர்கள்; அறிமுகமாகிறது அரசின் புதிய திட்டம்.!

Summary:

sex tourcher controled - high court new method

நாட்டில் இன்றைக்கு இருக்கும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று பாலியல் தொல்லை குறித்த பிரச்சனை. குக்கிராமங்கள் முதல் வளர்ச்சி அடைந்துள்ள நகரங்கள் வரை இந்த தொல்லை இருக்கத்தான் செய்கிறது.

இதனால் பெரிதும் பாதிப்படைவது பள்ளி, கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள் என்ற நிலையிலிருந்து தற்போது சிறுவர் சிறுமியரை கூட விட்டுவைக்காத அளவிற்கு கேவலமாக நடந்துகொள்கின்றனர் காமக் கொடூரர்கள்.

இந்நிலையில் பாலியல் தொல்லைகள் பெரிதும் நிகழும் இடங்களாக பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் திகழ்கின்றன. இங்கு மாணவிகள் மற்றும் பெண்கள்  தங்களுக்கு தேவையான கோரிக்கைகளை நிறைவேற்றும் பொருட்டு அரசு அதிகாரிகளிடம் தொடர்பு கொள்கின்றனர். இந்நிலையில் பல பாலியல் தொடர்பான புகார்கள் எழுந்துள்ளது.

இந்நிலையில் பெருகி வரும் பாலியல் குற்றங்களை தடுக்கும் பொருட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் அரசு அதிகாரிகளின் அறைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்று தமிழக தலைமை செயலருக்கு சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.


Advertisement