ஆங்கிலேயரை முதன்முறையாக அடித்து ஓடவிட்ட நமது பாட்டனார் பிறந்த தினம்.! புகழ்வணக்கம் செலுத்திய சீமான்.!

ஆங்கிலேயரை முதன்முறையாக அடித்து ஓடவிட்ட நமது பாட்டனார் பிறந்த தினம்.! புகழ்வணக்கம் செலுத்திய சீமான்.!


seeman-wishes-to-poolithevan


பூலித்தேவன் (1715–1767) நெல்லை சீமையின் நெற்கட்டான் செவ்வலைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்டு வந்த பாளையக்காரராவார். இந்திய விடுதலை வரலாற்றில் வெள்ளையனே வெளியேறு என்று முதன் முதலாக 1751 ஆம் ஆண்டில் வீர முழக்கமிட்டவர். இதனால் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் எனக் கருதப்படும் சிப்பாய்க்கலகத்திற்கும் (1857) முன்னோடியாகக் கருதப்படுகிறார். 

பூலித்தேவன், தன்பகுதியில் நிலத்தை அடமானம் பிடிக்கும் பண்ணையார்களுக்கோ அல்லது ஆதிக்கம் செலுத்தும் மேல் இடத்திற்கோ, மேல்வாரம் தன்மையிலோ, வரி என்ற பெயரிலோ, ஒரு மணி நெல்லைக் கூட யாருக்கும் கண்ணில் காட்டமாட்டாராம், இதன் காரணமாய் ஆவுடையாபுரம் நெற்கட்டான் செவ்வல் என பெயர் மாற்றப்பட்டது என வரலாறு கூறுகிறது.

புலித்தோல் மற்றும் புலி நகங்களை அணிவதிலும் அவருக்கு விருப்பம் அதிகம் இருந்தது. இதனால்  காத்தப்ப பூலித்தேவரை எல்லோரும் புலித்தேவர் என்றே அழைத்து வந்தனர். காத்தப்ப பூலித்தேவரின் திறமையைக் கண்ட அவரது பெற்றோர் அவருடைய பன்னிரண்டாவது வயதில் அதாவது 1726இல் அவருக்குப் பட்டம் சூட்டி அரசராக்கினார்கள்.

இந்தியாவை அடிமைப்படுத்தி ஆண்ட ஆங்கிலேயருக்கு எதிராக முதல் குரல் எழுப்பி இந்த தேசத்தில் விடுதலைத் தீயை பற்ற வைத்த மாமன்னர் பூலித்தேவன் அவர்களின்  ஜெயந்தி விழா இன்று செப்டம்பர் 1. 306வது பிறந்தநாள் காணும் பூலித்தேவன் அவர்களின் நினைவை போற்றி சீமான் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், அன்னைத் தமிழ்நிலம் அடிமைப்பட்டு விடக்கூடாது என்பதற்காக அந்நிய ஏகாதிபத்தியத்தை அடித்து விரட்டிய புரட்சியாளர்! தமிழனின் வீரத்தையும் மானத்தையும் நெற்கட்டும் செவலில் நிலைத்த புகழோடு நிறுவிய பெருந்தகை! வீரமிகு நமது பாட்டனார் பூலித்தேவன் அவர்களுக்கு புகழ்வணக்கம்! என சீமான் குறிப்பிட்டுள்ளார்.