திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடாதது ஏன்.? சீமான் கொடுத்த விளக்கம்.!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடாதது ஏன்.? சீமான் கொடுத்த விளக்கம்.!


seeman talk about election

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவித்த பிறகு பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. இந்தநிலையில் அனைத்து காட்சிகளிலும் தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் வாங்கப்பட்டு தற்போது வேட்பாளர்களையும் அறிவித்து வருகின்றனர்.

மேலும், வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் உச்சகட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், முக்கிய கட்சிகளும்  தங்கள் வேட்பாளர்களை அறிவித்து வருகிறது. அதன் படி நேற்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், 234 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை, சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அறிமுகப்படுத்தினார்.

seemanஇதில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சீமான், திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பு, சீமான், திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிடும் தொகுதியில், அவரை எதிர்த்து நான் போட்டியிடுவேன் என்று கூறியிருந்தார். இந்தநிலையில், ஸ்டாலின் கொளத்தூரில் போட்டியிடுகிறார் நீங்கள் திருவொற்றியூர் போட்டியிடுவதாக அறிவித்துள்ளீர்களே என கேட்டுள்ளனர்.

இதற்கு பதிலளித்த சீமான் கொளத்தூரில் தான் போட்டியிடலாம் என்று இருந்தேன். ஆனால் மக்கள் நலன்தான் முக்கியம். ஒருவரை வீழ்த்துவது முக்கியம் இல்லை. ஒருவரை வீழ்த்துவதை விட மக்களுக்கு என்ன செய்கிறேன் என்பதே முக்கியம். இதனால் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடாமல் திருவொற்றியூர் தொகுதியை தேர்வு செய்தேன் என தெரிவித்தார்.