பின்வாங்கினார் சீமான்.? ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடவில்லையாம்.! வெளியான முக்கிய தகவல்.!

பின்வாங்கினார் சீமான்.? ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடவில்லையாம்.! வெளியான முக்கிய தகவல்.!


seeman contest in thiruvottiyur thoguthi

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் அதிமுக, அமமுக, திமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் எனப் பல முனை போட்டி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. 

இந்தநிலையில், அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள். மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 117 ஆண் வேட்பாளர்கள், 117 பெண் வேட்பாளர்கள் போட்டியிட உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில், திமுகவை மிக கடுமையாக எதிர்த்து பிரசாரம் செய்து வருகிறது நாம் தமிழர் கட்சி. 

seemanசமீப காலமாக திமுக தலைவர் ஸ்டாலின் எந்த தொகுதியில் போட்டியிடுகிறாரோ அந்த தொகுதியில் தான்  நான் போட்டியிடுவேன் என கூறி வந்த சீமான், திருவெற்றியூர் தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த சட்டமனற்த் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் திருவெற்றியூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சிக்கு கணிசமான வாக்குகள் கிடைத்ததால், சீமான் அந்த தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.