தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்..? அதிகரிக்கும் கொரோனோவால் ஆட்டம் காணும் மக்கள்..



Second Lock down in Tamil Nadu

இந்தியாவில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்ற கேள்வி மக்கள் மத்தியில்எழுந்துள்ளது.

நாடு முழுவதும் மீண்டும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார்.

Latest tamil news

குறிப்பாக தமிழ்நாட்டில் குறைந்துவந்த கொரோனா தொற்று, கடந்த  சில வாரங்களாக மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. நாளுக்கு 300 என்ற எண்ணிகையில் பாதிக்கப்பட்டோர் இருந்தனர். தற்போது படிப்படியாக தொடர்ந்து கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளது. அதன்படி, நேற்று ஒரே நாளில் 836 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் தமிழகத்திலும் மீண்டும் ஊரடங்கு முறை அமலுக்கு வருமா என்ற கேள்வி தற்போது மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.