வாவ் சூப்பர்... தொந்தரவு இருந்தா துணிந்து சொல்லுங்க.!! தமிழகத்திலேயே முன் மாதிரியாக தருமபுரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி அசத்தல்.!

வாவ் சூப்பர்... தொந்தரவு இருந்தா துணிந்து சொல்லுங்க.!! தமிழகத்திலேயே முன் மாதிரியாக தருமபுரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி அசத்தல்.!


seal-the-complaint-numbers-in-the-students-textbook

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் சீண்டல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், தமிழகம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த, அரசு அறிவுறுத்தி வருகிறது. மாணவ- மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு யாரேனும் கொடுத்தால் அது குறித்து புகார் செய்ய, புகார் எண்கள் அறிவித்து அதுசார்பில் மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

 இந்நிலையில் தருமபுரி தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், தொடுதல் குறித்தும், பாலியல் தொந்தரவு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் மாணவிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டன. தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ள உதவி எண்களை தமிழகத்திலேயே முதல் முறையாக, முன் மாதிரியாக தருமபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் ரப்பர் ஸ்டாம்பில் தயார் செய்துள்ளனர். 

Govt school

இதனை இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவிகளின் அனைத்து பாட புத்தகங்களின் முன் பக்கங்களில் பதித்து வருகின்றனர். மாணவிகளின் புத்தக அட்டைகளில், "நிமிர்ந்து நில், துணிந்து சொல்" என்ற வாசகத்துடன், புகார் எண்கள் சீல் வைக்கப்பட்டன. அதில் கல்வி வழிகாட்டி மையம் எண் 14417, குழந்தைகளின் உதவி எண் 1098, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 1077 மாவட்ட ஆட்சியரின் வாட்ஸ்அப் எண் உள்ளிட்ட எண்கள் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த உதவி மையத்தில் உள்ள புகார் எண்களுக்கு தொடர்பு கொண்டால், புகார் தெரிவிப்பவர்கள் குறித்த முழு விவரம் ரகசியமாக வைக்கப்படும். எனவே மாணவிகள் தங்களுக்கு தொந்தரவுகள் ஏற்பட்டால் உடனடியாக தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளனர்.