தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படுகிறது? ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல் பாடப்புத்தகங்கள் வழங்க உத்தரவு!

தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படுகிறது? ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல் பாடப்புத்தகங்கள் வழங்க உத்தரவு!


school text book deliver from august 3

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் அனைத்து பள்ளிகளும் கடந்த மார்ச் மாதம் முதலே மூடப்பட்டது.பொதுவாக அனைத்து வருடமும் புதிய கல்வி ஆண்டானது ஜூன் மாதத்தில் துவங்கும். இதற்கான மாணவர்கள் சேர்க்கை இரண்டு மாதங்களுக்கு முன்பே துவங்கிவிடும். ஆனால் கொரோனாவின் காரணமாக எந்த பள்ளிகளும் திறக்கப்படாததால் 2020-21 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறாமல் உள்ளது. 

இந்தநிலையில் குழந்தைகளை எப்போது பள்ளியில் சேர்ப்பது, ஏற்கனவே படித்துக்கொண்டிருந்த குழந்தைகள் எப்போது பள்ளிக்கு போவார்கள் என்ற கேள்வி பெற்றோர் மத்தியில் எழுந்துள்ளது. இந்தநிலையில் தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் துவங்கியுள்ளது. தனியார் பள்ளிகள் பள்ளி கட்டணத்தை 40% வசூலித்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Govt school

அதேபோல் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக கல்வி கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் விலையில்லாத புத்தகம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல் மாணவர்களுக்கு அரசு பள்ளிகளில் விலையில்லாத புத்தகம் விநியோகம் செய்யப்படும் என்றும், விலையில்லா பாடப் புத்தகங்களோடு புத்தகப் பையும் வழங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்தநிலையில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் பெற்றோர்களும் மாணவர்களும் காத்திருக்கின்றனர்.