கொரோனாவால் ஒரே நாளில் ஹீரோவான டீச்சர்! பாராட்டித்தள்ளும் பொதுமக்கள்!

கொரோனாவால் ஒரே நாளில் ஹீரோவான டீச்சர்! பாராட்டித்தள்ளும் பொதுமக்கள்!


school-teacher-helping-to-students-family

அரியலூர் மாவட்டம் துப்பாபுரம் கிராமத்தில் கல்வி கற்று கொடுக்கும் ஆசிரியை கண்ணகி தன்னிடம் படிக்கும் மாணவர்களின் குடும்பத்திற்கு ரூ.1000 நிதியுதவி வழங்கி அனைவருக்கும் எடுத்து காட்டாக மாறியுள்ளார்.

சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா பரவல் அதிகமாக பரவியதால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மே 17-ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது.

corona

ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தால் பலரும் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் சூழ்நிலை தமிழகத்தில் உருவாகியுள்ளது. இந்த நிலையில் பல சமூக ஆர்வலர்களும், அரசியல் தலைவர்களும் தமிழக மக்களுக்கு நிவாரண உதவிகளை செய்து வருகின்றனர். இந்த நிலையில், அரியலூர் மாவட்டம் துப்பாபுரம் கிராமத்தில் கல்வி கற்று கொடுக்கும் ஆசிரியை கண்ணகி தன்னிடம் படிக்கும் மாணவர்களின் குடும்பத்திற்கு ரூ.1000 நிதியுதவி வழங்கி உள்ளார்.

தலைமை ஆசிரியை கண்ணகியின் இந்த மனிதநேயமிக்க உதவியை கண்டு துப்பாபுரம் கிராமமக்கள் நெகிழ்ச்சியுடன் அவருக்கு நன்றி தெரிவித்தனர். அந்த கிராமத்தில் மட்டும் இன்றி தற்போது இணையத்திலும் ஒரே நாளில் ஆசிரியை ஹீரோவாக மாறியுள்ளார். இவர் செய்த உதவியை பொதுமக்கள் அனைவரும் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.